ப்ரியாமணிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம்
ப்ரியாமணிக்கு ரிடையர்மென்ட் நேரம் நெருங்கிவிட்டதால், மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தீவிரமாக உள்ளனர் குடும்பத்தினர்.
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ப்ரியாமணி.
அவருக்கு இப்போது தமிழில் சுத்தமாக படங்களே இல்லை.
கன்னடத்தில் மட்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது 29 வயது ஆகும் ப்ரியாமணியோடு ஜோடி சேர இப்போதுள்ள ஹீரோக்களும் விரும்புவதில்லை.
எனவே ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.
எனவேதான் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலக இதுதான் சரியான சமயம் என முடிவு செய்துள்ளார்.
ப்ரியாமணிக்கு ஏற்ற தொழிலதிபர், சாப்ட்வேர் எஞ்ஜினீயர் அல்லது வெளிநாட்டில் செட்டிலான இந்தியர்களில் மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம் ப்ரியாமணியின் பெற்றோர்.
shared via
No comments:
Post a Comment